RSS

சூடா "டீ" குடிப்பவரா நீங்கள்? - அபாயம்!


சூடா "டீ" (Tea) குடிப்பதால் வயிற்றில் "கேன்சர்" (Cancer) வரும் அபாயம் உள்ளது என்று இந்திய நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். 

ஆய்வின் முடிவில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
வாய் முதல் இரப்பை வரை உள்ள குழாய் மிக மிக மிருதுவானது.  குறிப்பிட்ட அளவில்தான் அக்குழாய் சூட்டைத் தாங்கும்.  அதிக சூடாக அருந்தினால், அதன் சுவர் அரிக்க துவங்கிவிடும்.  அதிக சூட்டுடன் "டீ" குடிப்பதால் அதன் சுவர்கள் வெகுவாக பாதிக்க்ப்படுகின்றன.   அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, அதன் திசுக்கள் பலவீனப்படுகின்றன.  இதனால் சுவர் பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி அபாயம் உள்ளது. 
பான்பராக், புகையிலை போடுபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.1 மடங்கும், பீடி பிடிப்பவர்களுக்கு  கேன்சர் வரும் வாய்ப்பு 1.8 மடங்கும்,  சிகரட் பிடிப்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு  2 மடங்கும்,  மது அருந்துபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.8 மடங்கும் உள்ளது.
ஆனால் அதிக சூட்டுடன் "டீ" குடிப்பவர்களுக்கு இவர்களை விட கேன்சர் வரும் வாய்ப்பு 4 மடங்கு அதிகமாக உள்ளது.  அதிக சூட்டுடன் "டீ" குடித்தால்தான் கேன்சர் வரும்.  ஆனால் அதிக சூட்டுடன் "காஃபி" (Coffee) குடிப்பதால் கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 
சூடா "டீ" குடிப்பவரா நீங்கள்?  உடனே நிறுத்துங்கள்!


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

sakthininja. Powered by Blogger.